Sunday, August 15, 2010
குரோம்பேட்டை போட்டோநோவா 1
நான் எம் ஐ டி யில் பொறியியல் உயர்படிப்பு படித்துகொண்டிருந்த போது எனக்கு 25 வயது. பதின் வயதுகளில் பெண்களிடம் பேசுவதற்கு எனக்கும் எங்கள் நண்பர்களுக்கும் வாய்ப்பமையவில்லை. அப்படியே வைப்புகிடைதாலும் நண்பர்கள் அதை தொடர விடுவதில்லை. எல்லோரும் மௌனம் பேசியதே சூர்யா கெட்டப்ல திரிஞ்ச பயல்க. எங்களின் இருபதின் வயதுகளில் எல்லோரும் தனித்தனியாக வாய்ப்பை உருவாக்க தொடங்கினோம். இணைய தொடர்புக்கும், துறை சம்பந்தமான பக்கங்களை பிரதி எடுக்கவும் போட்டோ நோவா எனும் இணைய மையத்திற்கு செல்வதுண்டு. படிப்பிற்கான செலவுகளை நண்பர்களிடம் பெற்று வந்ததால் நம்மிடம் பணம் எப்போதும் இருப்பதில்லை. அந்த இணைய மையத்தில் தேன் மற்றும் கிளினி என்ற இரு பெண்கள் இருப்பதுண்டு. சில நாட்களில் இருவரும் எனக்கு அறிமுகமானார்கள். நாளடைவில் அம்மையத்தில் நானும் எனது நண்பர்கள் சக்தி மற்றும் ராஜேஷ் ஆகியோரும் அங்கே செல்வதுண்டு. அவர்கள் எங்களிடம் பணம் வாங்குவதில்லை. இரு பெண்ணுக்கும் அனைவரும் தன்னிடம் மட்டுமே பேசவேண்டும் என்ற பெண்களுக்கே உரிய எண்ணம் இருந்தது. ஒருவரிடம் தனியாக பேசினால் அது என்ன, எதைப்பற்றி என்பதை உடனே தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு தலையே வெடித்துவிடும். படிப்பு முடிந்து நான் எனது நண்பன் சம்பத் மற்றும் அமெரிக்க சென்று வந்த மணிவண்ணனும் ஒரு வீடு எடுத்து தங்கினோம். நான் தேனை இருவருக்கும் அறிமுகம் செய்துவைத்தேன். நம்ம நண்பர் மணிவண்ணன் யு எஸ் ரிடர்ன் என்பதால் அவரிடம் ஒரு கைபேசியும் சில இளவல்களும் கூடவே இருப்பதுண்டு. இங்கு மணிவண்ணனை பற்றி ஒருவிஷயம் சொல்லவேண்டும். வெள்ளிக்கிழமைகளில் நம்மை மலையேற்ற கூப்பிடுவார். "கையில் காசில்ல மணி என்பேன். " நான் கடன் தர்றேன் ஆனால் ஒரு கண்டிசன்?" என்பார். எப்படிஎன்றால் நமக்கு அவர் கடன் கொடுத்தால் அவருக்கு ஒரு பீர் வாங்கி தரவேண்டும். நம்மை கடனாளியும் ஆக்கி, அவரின் தாகத்தையும் தீர்த்து கொள்வார். எப்படி இருக்கிறது? ஏகாதிபத்தியம் அமெரிக்காவில் மட்டுமல்ல அமேரிக்கா சென்று வந்த மணிவண்ணனிடம் இருந்தது. இவர் இப்படியென்றால் சம்பத் கிரிக்கெட்டுக்கும் திரைப்பட காதலுக்கும் கொடிபிடிக்கும் தேசியவாதி. வாரம் முழுக்க எந்த ஒரு செய்தி தாலும் வாங்காதவன், வெள்ளிகிழமை மட்டும் தந்தி முதல் மலர் வரை அனைத்தும் வாங்கி வருவான். விடயம் வேறொன்றுமில்லை. அன்றுதான் வெள்ளி மலர், சினிமா மலர் என்ற சினிமா பகுதிகள் நடிகைகளின் பெரிய மார்புகளுடன் வெளிவரும். மணிவண்ணன் நல்லா நகைச்சுவையுணர்வு கொண்டவேறேன்றால் சம்பத் குழந்தை தனம் மிகுந்தவன். நாங்களும் அதற்கு காத்திருப்போம் என்பது வேறு விடயம். போட்டோ நோவா மையத்தில் காலை ஆறுமணிக்கே தேன் திறந்து விடுவதால், அப்பெண் மணிவண்ணன் கைபேசி மூலம் எங்கள் அனைவரிடமும் கதைபதுண்டு. அவள்தான் எங்களுக்கு அலாரம். நாளடைவில் தேனின் குரலை முதலில் கேட்க காலை ஐந்து மணிக்கே எழுந்து போட்டி போடுவதுண்டு. யாருக்கும் தெரியாமல் அதிகநேரம் பேச எல்லோருக்கும் மிகுந்த ஏக்கம். நான் என்ன பேசு வேநேன்றால் 'நீ அழகா இருக்கே, நீ என் கனவில் வந்தே, நம்ம ரெண்டு பெரும் டூயட் பாடினோம். இந்த கலர் சேலையில் தேவதை மாறி நீ வந்தே' என நீண்டு கொண்டே போகும். தேனும் சளைக்காமல் "அப்புறம்" என்பாள். என்னிடம் மட்டும் அல்ல எல்லோரிடமும் அப்படிதான். ஒரு நாள் நண்பனின் வீட்டில் மலையேறி விட்டு அதிகாலை ஆறு மணிக்கு முன்பே நோவா மையத்தில் தேனின் தரிசனத்திற்கு காத்திருந்தேன். சரியாக ஆறுமணிக்கு தரிசனம் தந்தாள். என்னை அமர வைத்துவிட்டு தன்னை பணிக்கு டபிள் மற்றும் கேபின்களை சரிபடுத்தி கொண்டும் கணினிகளை பூட் செய்துகொண்டுமிருந்தால். அவளிடம் என்ன கதை சொல்வது, எப்படி வசிய படுத்துவது என யோசித்துகொண்டிருந்தேன். ஏனென்றால் இத்தனிமை எப்போதாவதுதான் கிடைக்கும். அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ் என நினைத்து கொண்டிருந்த வேளையில் வாசலில் மணிவண்ணனின் நிழலாடியது. பாலச்சந்தர் படத்தின் கதாநாயகி பிலிம் ரோல் எரிந்தது போல் மனதில் நான் எரிந்து கொண்டிருந்தேன். அதேதான் மணிவண்ணனுக்கும் நடந்திருக்கும் என்பதால் இருவரும் புன்னகை கலந்த பார்வைகளை பரிமாறிக்கொண்டோம். ஆனால் தேனுக்கு இரட்டை மகிழ்ச்சி. மொக்கை போடா ரெண்டு வழிசல்கள் வந்துள்ளதே. அப்புறமென்ன மாத்தி மாத்தி கதைத்துக்கொண்டு சென்று விட்டோம். இதற்கிடையில் சம்பத் தினமும் மாலையில் அங்கு வர ஆரம்பித்தான். வரும்போது டைரி மில்க் சாக்லேட் அவளுக்கு வாங்கி வருவான். இதை எங்களுக்கு தெரியாமல் அவன் செய்தான். தேன் அதையும் என்னிடம் சொல்லிவிட்டாள். இந்த விளையாட்டை உறுதி படுத்த அவனை இரு சாக்லேட் வாங்கி வருமாறு அவளை சொல்ல வைத்தேன். அதுவும் நடந்தது. அந்த இரு சாக்லேட்களில் ஒன்று எனக்காக அவன் சென்ற பின் காத்திருக்கும். அப்பெண்ணுக்கு பிறந்தநாள் வந்தது. எனக்கும் நண்பன் சக்திக்கும் ஒரு கொள்கை உண்டு. எப்பெண்ணுக்கும் நமது கையில் இருந்து பைசா செலவு செய்யக்கூடாது. எனவே அவளிடம் உன் பிறந்த நாளுக்கு எங்களுக்கு பீர் வாங்கித்தர காசு தரவேண்டும் என்றோம். சரி என்றாள். உண்மையில் எங்களிடம் காசு இருக்காது. பிறந்தநாள் பரிசாக மணிவண்ணன் ஒரு சர்கஸ் பார் விளையாட்டு பொம்மை வாங்கி கொடுத்தார். நாங்கள் கேலி செய்வோம் என்று "அந்தப்பெண் நமக்கு நிறைய உதவி செய்துள்ளார் " என சமாளித்தார். உண்மையில் தென் எங்களுக்கு நிறைய உதவியிருக்கிறார். ஆனால் இவர் வாங்கி கொடுத்தது ஒரு வழிசலேஎன்பது என் எண்ணம். நண்பர் சம்பத் ஒரு படி மேலே பொய் ரோசாப்பூ போக்கே பரிசளித்தார். இங்குதான் எனக்கு சந்தேகம் வந்தது. அவனிடம் மொட்டை மாடிக்கு கூட்டி சென்று போட்டு வாங்கினேன். " நீ அவளுக்கு மட்டுமல்ல எனக்கும் ஒரு சாக்லேட் தினசரி வாங்கி வருகிறாய்" என்று போட்டு உடைத்தேன். ஆனால் அவள் தன்னை காதலிப்பதாக சொன்னான். எப்படி என்றேன். அவனது பதில் சிறுபிள்ளைதனமாக இருந்தது. "தினமும் நான் செல்லும் போது அங்குள்ள மியூசிக் சிஸ்டத்தில் காதல் பாடலாக போடுகிறாள்" என்றான். 'விழாமலே இருக்க முடியுமா விழுந்து விட்டேன் காதல் வலையிலே' போன்ற காதல் பாடல்கள். மற்ற பாடல்கள் எனக்கு நினைவில் இல்லை. அந்த நேரத்தில் நிறைய ஆண்கள் வருவதுண்டு. ஆனால் பாடல்களெல்லாம் தனக்காகவே என நம்பினான் அந்த வெகுளி நண்பன். இதை அப்பெண்ணிடமே சொல்லி இந்த போலி காதலுக்கு முற்று புள்ளி வைத்தேன். இதிலிருந்து சம்பத் என்னை எதிரியாக நினைக்க தொடங்கினான். அது பின்னாளில் எனக்கு தெரிய வந்தது. இதற்கிடையில் எங்களின் கல்லூரி இளவல் கிச்சா என்னும் கிருஷ்ண மூர்த்தியை தேனுக்கு அறிமுகபடுத்தி வைத்தோம். கிச்சா இந்த விடயத்தில் கில்லாடியாக இருந்தான். அவனிடமும் கைபேசி இருந்ததால் தேன் தனது தடவிய வார்த்தைகளை கொண்டு தேனை ருசிக்க ஆரம்பித்தான். மீதியை அப்புறம் பாக்கலாங்க.
Wednesday, August 6, 2008
கடவுள் உண்டா இல்லையா? - 2
எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் கடவுள் மேல் கோவம் வரும் ஆனால் கடவுள் இல்லையென்று எண்ணியதில்லை. சிறுவர் மலருக்கு அப்புறம் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என்று சிதிரகதைகளை தேடி தேடி படித்தேன். இதில் ராணி காமிக்ஸில் வரும் ஜேம்ஸ் பாண்டு கதைகள் ரொம்ப பிடிக்கும். காரணம், அதில் வரும் பெண்கள் அரை குறை ஆடைகளில் அலம்புவார்கள். பிறகு ராஜேஷ்குமார்,பட்டுகோட்டை பிரபாகர் என்று படித்து, கடைசியில் எல்லோரும் போர் அடித்தார்கள். வயது பதினான்கில் பேப்பர் படிக்க செல்லும்போது அங்கு வரும் நபர்கள் அன்றைய அரசியல் பற்றி விவாதிப்பார்கள். கலர் கலரான வெள்ளி மலர் கிடைக்கும் வரை அவர்கள் பேட்சை கேட்க ஆரம்பித்தோம் நானும் எனது நண்பர்களும். நாங்கள் எல்லா மன்றங்களுக்கும் செல்வதால் என்னையறியாமலேயே அவர்களை எடை போட ஆரம்பித்தது. காங்கிரஸ் காரர்கள் காந்தியை பற்றியும் ஜனதா கட்சியை பற்றியும் பேசுவார்கள். பாதி புரியும் பாதி புரியாது. திமுக காரர்கள் திராவிட இயக்க வரலாற்றை அவ்வப்போது நினைவு கூறும்போது மிக பிரமிப்பாக இருக்கும். அதிமுக நபர்கள் அன்றைய நிகழ்வுகளை பற்றி பேசுவார்கள்.எனக்கொன்றும் கிடைக்கவில்லை. கம்யூனிஸ்ட் காரன் பேசுவது ரஸ்யா மற்றும் சீனா பற்றியே இருக்கும். சிலநேரங்களில் ஊர் பிரச்சனைகளை பற்றி பேசும்போது புரியும் புடிக்கும். நாளாக நாளாக திராவிடர் கழக புத்தகங்கள் என்னை எனக்குள்ளே கேள்வி கேட்க தூண்டியது. என் பெற்றோரிடம் கேட்டால் ஒழுங்கான பதில் இல்லை. அதன் பிறகு கம்யூனிஸ புத்தகங்கள் என் அண்ணன் மூலம் கிடைத்தது. கெட்டவனான அண்ணன் நல்லவனாக தெரிய ஆரம்பித்தான்.
இவ்வுலகம் கருது முதல்வாதம் மற்றும் பொருள் முதல்வாதம் என்ற இரண்டு தத்துவங்களில் பிரிந்து இருப்பதை உணர்ந்தேன். சிறுவயதில் பூசாரி குளிக்க ஓடியதும் மற்றும் சில நிகழ்வுகளும் என்னை இந்து மதத்தில் இருந்து ஓட வைத்தது. பொருள் முதல்வாதம் என்னை ஈர்த்தது. பதினான்கு வரை வீட்டில் பதிபக்தியாக இருந்த நான் பதினாறு வயதில் நாத்திகனாக உருவானேன். வீட்டில் எனது அண்ணன் போல நானும் மாறியது என் அம்மாவுக்கு மிக வருத்தம். நாளடைவில் பெரியார் பற்றியும் கம்யூனிஸம பற்றியும் பார்பனீயம் பற்றியும் சொல்ல ஆரம்பித்தேன். அப்போதைக்கு ஆமாம் சொல்லும் அம்மா அடுத்த நிமிடம் முருகா, வடிவேலா... என ஆரம்பித்து விடும். இன்று இந்து மதம் ராமர் கோயில், ராமர் பாலம் என்றும் நாட்டில் ரத்தம் பார்க்கும் நேரத்தில், என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ராமரைபற்றியோ, சீதை பற்றியோ சொன்னதில்லை. அம்மாவிடம் நான் கண்ட தெய்வங்கள் அய்யனார், முனியாண்டி, மாரியாத்தா, சோனைசாமி, மதுரை வீரன், பாண்டி கோவில், அழகர் கோவில். இவர்கள் இந்துக்களே அல்ல. நானும் இந்துவல்ல என்று உணர ஆரம்பித்தேன். அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் மற்றும் பலர் என்னை கருத்துமுதல்வாத நிலையை விட்டு பொருள் முதல்வாத நிலைதான் சரியான பதை என்று தெளிவு படுத்தினார்கள்.கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை.
காரணம்:கடவுள் கண்முன் தோன்றவும் இல்லை.என்னால் உணரவும் முடியவில்லை.உணர்ந்தவர்கள் என்னை உணரவைக்க முடியுமா?
அல்லா உண்மையெனில் பாபர் மசூதி எப்படி இடிந்திருக்கும். கர்த்தர் உண்மையெனில் ஒரிசாவில் பாதிரியார் எப்படி உயிரோடு எரிக்கப்பட்டு இருப்பார்.
இவர்களை விடுங்கள் தனிதனி துறை வைத்திருக்கும் இந்துமத கடவுள்கள் தமிழக கரையோரம் சுனாமி வரும்போது எங்கே போனார்கள்.முருகன் வள்ளியிடம் பள்ளி கொண்டிருதாரா?சிவன் பாற்கடலில் பார்வதியுடன் பஸ்கி எடுத்து கொண்டிருந்தாரா?விஷ்ணு யாரும் இல்லையென்று பாம்பின் மேல் துயில் கொண்டிருந்தாரா?வீறு கொண்டு எழும் நாக் அவுட் காளி ரம்மி விளையாடிக்கொண்டு இருந்ததா? பிள்ளையார் கம்மா கரையில் குளிக்கும் கமலாவின் முதுகை வெறித்து கொண்டிருந்ததா?என்ன செய்தார்கள், என்ன செய்கிறார்கள்?அவர்கள் என்ன செய்ய முடியும்.அறுபடை முருகனின் கோயிலில் அருவதேட்டு பூட்டு தொங்குது. அவர்களுக்கே காவல் தேவை படுத்து.அவர்கள் வந்து நம்மள காத்து ...என்ன கொடுமை சார் இது.
இந்து கடுவுள்கள் செய்தேதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.அவாள்களுக்கும், ப்ரேமானாந்தா போன்ற போலி சாமியார்களுக்கும்நிறையவே சோறு போடுறார்.
முடிவாக, கடவுள் இருக்காரோ இல்லோயோ...தயவு செய்து மதவெறிக்கோ, சாமியார் (சாமியார் என்றாலே போலிதான், எனவே போலி சாமியார் ஒன்று இல்லை) வேட்கைக்கோ ஆட்படவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
வாழ்க மனித நேயம்.
வளர்க பகுத்தறிவு.

Tuesday, August 5, 2008
கடவுள் உண்டா இல்லையா?
எல்லோரையும் போலவே எனக்கும் இந்த ஐயம் எனது பால்ய வயதில் எழுந்தது. என்னை சிந்திக்க தூண்டிய முதல் கேள்வி இது. எனவே தான் இந்த தலைப்பை எனது முதல் தலைப்பாக கொண்டுள்ளேன். அதற்கு முன்பு வரை நான் எல்லோருக்கும் ஆமாம் சாமி தான். பத்தாம் வகுப்பு படிக்கும் வரை நான் வெள்ளி செவ்வாய் கோயிலுக்கு செல்லாவிட்டாலும், வீட்டில் அம்மா சார்பில் விளக்கேற்றி சாமி கும்பிடும் ஒழுக்கமான பையன். மதுரை தத்தநேரியில் வைகை கரையோரம் அமைந்துள்ளது எங்கள் வீடு. நான் வளரும்போது இந்து மதத்தை சார்ந்தவன் என்றும் எனது ஜாதி பள்ளன் என்றும் வளர்க்கப்பட்டேன். மார்கழி மாதம் எங்கள் தெரு சிறுவர்கள் எல்லோரும் காலையில் எழுந்து அருகில் உள்ள கோயிலுக்கு செல்வது வழக்கம். அங்குள்ள அனுமார் கோயிலின் பூசாரி முறை திடீரென்று பதறினார். ஓடி சென்று ஒரு குடத்தில் தயாராக இருந்த தண்ணீரை தனது மேல் ஊற்றி கொண்டார்.
பக்கத்தில் இருந்த முதியவர் ஒருவர் என்னை திட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் இருந்த நண்பன், உன் கை அவர் மேல் பட்டு விட்டது, அதனால் தான் அவர் குளிக்கிறார் என்றான். ஏன் என்று அவனிடம் கேட்டேன். தெரியாது என்றான். எனது பெற்றோரிடமும் அண்ணனிடமும் நடந்த விடயத்தை சொன்னேன். எங்க அண்ணன் சாமி கும்பிட மாட்டான். எனவே அவன் எங்களுக்கு கெட்டவனாகவே பட்டான். பிறகு நாம் தாழ்ந்த சாதி அவர்கள் உயர்ந்த சாதி (அல்ல, இது உயர்ந்த சதி) என்று விளக்கம் கொடுத்தார்கள். எனக்கு கோவம் வரவில்லை. மறுநாள் முதல் நாங்கள் வேண்டுமேன்றே பூசாரியை தொட ஆரம்பித்தோம். அவர் ஓட்டத்தையும் குளிப்பதும் எங்களுக்கு தினசரி வேடிக்கையாக பட்டது. அந்த பூசாரி கோனார் சாதி பெரியோரிடம் முறையிட்டு அவர் எங்களை அதட்டினார். நாங்கள் விடுவதாயில்லை.
காலையில் எழுந்து தினசரி படிப்பது எனக்கு வழக்கம். படிக்கும் பழக்கத்தை உருவாகியது அரசியல் கட்சி மன்றங்களே. காங்கிரஸ் மன்றத்தில் தினமலர் பேப்பருடன் வரும் சிறுவர் மலர், தினமணியுடன் வரும் தினமணிகதிரின் தும்பி கதை, தினகரனில் சினிமா படங்கள் கம்யுனிஸ்ட் மன்றத்தில் சீனா எனும் அங்கில புத்தகத்தில் வெள்ளைக்கார கறிகளின் படங்கள். வெள்ளிமலருக்கு கடும் போட்டியே நடக்கும். இந்த பேப்பரில் படம் பார்க்கும் வழக்கமே நாளடைவில் வாசிக்கும் பழக்கத்தை தூண்டியது. இதற்க்காக அதிமுக தவிர அணைத்து கட்சி மன்றங்களுக்கும் எனது நன்றிகள். ஏனெனில் அதிமுக மன்றத்தில் பேப்பர் ஒழுங்காக வருவதில்லை. யாரும் பொறுப்பேற்கவும் இல்லை.
தொடர்வேன்.....

Subscribe to:
Posts (Atom)